/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதராப்பட்டு அரசுப் பள்ளியில் ஏக் பாரத், ஷ்ரேஸ்தா பாரத் நிகழ்ச்சி
/
சேதராப்பட்டு அரசுப் பள்ளியில் ஏக் பாரத், ஷ்ரேஸ்தா பாரத் நிகழ்ச்சி
சேதராப்பட்டு அரசுப் பள்ளியில் ஏக் பாரத், ஷ்ரேஸ்தா பாரத் நிகழ்ச்சி
சேதராப்பட்டு அரசுப் பள்ளியில் ஏக் பாரத், ஷ்ரேஸ்தா பாரத் நிகழ்ச்சி
ADDED : ஏப் 20, 2025 11:10 AM

வில்லியனுார்: சேதராப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் 'ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்' நிகழ்ச்சி நடந்தது.
சேதராப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் (ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்) நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ேஹமமாலின தலைமை தாங்கினார். ஆசிரியை தென்றல் வரவேற்றார். ஐந்தாம் வட்ட பள்ளி துறை ஆய்வாளர் புவியரசன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கலை மற்றும் கலாசார பண்பாடு ஆகியவற்றை காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் மாணவர்கள் அந்தந்த மாநில மொழிகளில் உரையாடினர்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர். ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.