sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 திருநள்ளாரில் நாளை சனிப் பெயர்ச்சி பக்தர்கள் பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடு

/

 திருநள்ளாரில் நாளை சனிப் பெயர்ச்சி பக்தர்கள் பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடு

 திருநள்ளாரில் நாளை சனிப் பெயர்ச்சி பக்தர்கள் பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடு

 திருநள்ளாரில் நாளை சனிப் பெயர்ச்சி பக்தர்கள் பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடு


ADDED : மார் 05, 2026 05:01 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறும் சனிப் பெயர்ச்சி விழாவிற்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்கு 45 நாட்கள் முன்பும், பின்பும் இக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இந்நிலையில், கும்ப ராசியில் உள்ள சனி பகவான் நாளை 6ம் தேதி காலை 8.24 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை அதிகாலையில் இருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனைகள் நடைபெறும்.

இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள் நளன்குளம் வாயிலில் இருந்து வரிசையில் செல்ல வேண்டும். கட்டண தரிசனத்திற்கு 15 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுதும், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர், முதல் உதவி மையங்கள், பாலுாட்டம் அறைகள், தற்காலிக கழிவறைகள், நிரந்தர கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நளன் குளத்தை சற்றிலும், பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கவும், குற்றச் சம்பவங்களை தடுத்திடும் பொருட்டு 200 இடங்களில் சி.சி.டி.வி.,க்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர உதவிக்கு பொதுமக்கள் தகவல் மற்றும் அவசர உதவிக்கு 83002 61071 என்ற மொபைல் எண் மற்றும் 1070, 1077 ஆகிய டோல்பிரி எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us