/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாலையில் தீ விபத்து மூத்த தம்பதி மீட்பு
/
அதிகாலையில் தீ விபத்து மூத்த தம்பதி மீட்பு
ADDED : ஜூன் 30, 2025 03:01 AM
புதுச்சேரி : மூலக்குளத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த வீட்டில் சிக்கிய மூத்த தம்பதியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
மூலகுளம் எம்.ஜி.ஆர்., நகர் சாலை தெருவை சேர்ந்தவர் கொலின்,67; இவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்கள், வீட்டில் அடுப்பு எரிப்பதற்காக ஆங்காங்கே குப்பைகளில் உள்ள பேப்பர், அட்டைகளை பொறுக்கி வீட்டின் முன்பக்கம் மற்றும் மொட்டை மாடியில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மின்கசிவு ஏற்பட்டு, மொட்டை மாடியில் இருந்த பேப்பர், அட்டைகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கோரிமேடு தீயணைப்பு படையினர் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று, தீயை அணைக்க முயன்றனர். காற்று வேகமாக வீசியதால், வாசலில் வைக்கப்பட்டிருந்த பேப்பர், அப்டைகள் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெகு நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
கீழ்தளத்தில் இருந்த கொலின் மற்றும் அவரது மனைவியை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.