/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் தற்கொலை; போலீஸ் விசாரணை
/
முதியவர் தற்கொலை; போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 11, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்; உடல்நிலை பாதித்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சிவாஜி நகரை சேர்ந்தவர் வெள்ளத்தான், 71. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடலில் கட்டி வந்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தார்.
இருத்தும் குணமாகாததால், நேற்று முன்தினம் அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.