ADDED : செப் 04, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
பாகூர்: சாராயத்தில் பூச்சி மருத்து கலந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கரையாம்புத்துார் அடுத்த மணமேடு எம்.ஏ.எஸ்., நகரை சேர்ந்தவர் பக்கிரி, 75. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த மாதம் 20ம் தேதி பக்கிரிக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த பக்கிரி, நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த களைக் கொல்லி மருந்தை சாராயத்துடன் கலந்து குடித்தார்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மன்தினம் இறந்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
