ADDED : ஜூலை 02, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி சாரம் பிருந்தா வனம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 71; இவர் கடந்த 28ம் தேதி மதியம் பைக்கில் வீட்டிற்கு சென்ற போது அந்த வழியாக வந்த காரின் வலது பக்கத்தில் மோதியுள்ளார், இதில் படுகாயமடைந்த வெங்கடாசலபதியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.