UPDATED : அக் 18, 2026 02:05 AM
ADDED : அக் 18, 2026 02:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஒதியம்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 65. இவர் புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான, ஒதியம்பட்டில் உள்ள நிலத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 16ம் தேதி காலை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச ஆதிமூலம் சென்றார். அன்று மாலை 4 மணி அளவில் ஆதிமூலம் மோட்டார் கொட்டகையின் அருகே மின்சாரம் தாக்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பரசுராமன் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகள் மற்றும் மின் இணைப்புகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படாமல் இருந்ததால் தான், தந்தை மின்சாரம் தாக்கி இறந்ததாக வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், ஜோசப் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
