/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரைண்டர் கல்லால் அடித்து முதியவர் படுகொலை
/
கிரைண்டர் கல்லால் அடித்து முதியவர் படுகொலை
ADDED : ஏப் 21, 2025 06:45 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே முன்விரோதம் காரணமாக, கிரைண்டர் குழவி கல்லால் அடித்து முதியவர் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம், தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் சுந்தர் (எ) பாஸ்கர், 65; இவர், கோவில் திருவிழாக்களில் சாமி வேஷம் போட்டு, குறி சொல்லி வந்தார். மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில், இவர் தங்கிருந்த வீட்டு அருகே கிரைண்டர் குழவி கல்லால் தலையில், அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாஸ்கர் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, கொலை சம்பவம் குறித்து விசாரித்த வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முதியவருக்கும், இவரது வீட்டு அருகே வசிக்கும் தமிழரசன், 35, என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், தமிழரசன், முதியவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால், இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
அன்று இரவு இடையார்பாளையம் அருகே உள்ள தனியார் மது பாரில் முதியவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார், பின் வீட்டின் அருகே முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். எனவே, சந்தேகத்தின்பேரில், தமிழரசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., பக்தவச்சலம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.