ADDED : ஜன 22, 2026 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கார் மோதி மூதாட்டி இறந்தார்.
புதுச்சேரி, பெரிய காலாப்பட்டைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி; மீனவர். இவரது தாய் மல்லிகா, 80; நேற்று முன்தினம் பெரிய காலாப்பட்டு, இ.சி.ஆரில் உள்ள வள்ளலார் சேவை மையத்திற்கு உணவு வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக காலாப்பட்டு நோக்கி ெஷனாஸ் ஜெமிமா ரபி என்பவர் ஓட்டி வந்த கார் (பி.ஓய் 01 டி. டி 3848) மல்லிகா மீது மோதியது. படுகாயமடைந்த மல்லிகா பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து தொடர்பாக ஷெனாஸ் ஜெமிமா ரபி மீது வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

