/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் கட்டுப்பாட்டு மையம் : கலெக்டர் ஆய்வு
/
தேர்தல் கட்டுப்பாட்டு மையம் : கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 17, 2026 04:19 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அதில், 1950, சி- விஜில், பறக்கும் படை, வாக்காளர் உதவிமையம் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, அதன் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்தும், அதனை கையாளும் விதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

