தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மனுதாக்கல் நிறைவு: நெரிசலை சமாளிக்க தேர்தல் துறை ரெடி

 புதுச்சேரியில் மனுதாக்கல் நிறைவு: நெரிசலை சமாளிக்க தேர்தல் துறை ரெடி

 புதுச்சேரியில் மனுதாக்கல் நிறைவு: நெரிசலை சமாளிக்க தேர்தல் துறை ரெடி


ADDED : மார் 22, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தொகுதிக்கான மனு தாக்கலுக்கு இன்று இறுதி நாள் என்பதால் அனைத்து, தொகுதி அலுவலவலகங்களும் களை கட்டும் என்பதால், கூட்ட நெரிசலை சமாளிக்க தேர்தல் துறை 'டோக்கன்' முறையை பின்பற்ற ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாள் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

அமாவாசையில் துவங்கியது கடந்த 18 ம் தேதி முதல் அமாவாசை தினத்தில் இருந்து மனு தாக்கல் துவங்கியது. அதில், கடந்த 20ம் தேதி வரை முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 118 பேர் மனு தாக்கல் செய்தனர்.

ரம்ஜானில் ஒன்று நேற்று முன்தினம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் ரம்ஜான் விடுமுறை என்பதால், அங்கு மனு தாக்கல் நடைபெறவில்லை. வேலை நாளாக அறிவிக்கப்பட்ட மாகியில் நேற்று முன்தினம் ஒருவர் மனு தாக்கல் செய்தனர். இதனால், மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை 119 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று கடைசி நாள் மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணிக்குள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் தே.ஜ.,கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து ஒரு தொகுதியை தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்துவிட்டனர். அவர்களில், 12 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இக்கூட்டணியில் இன்னும் 18 பேர் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆனால், இண்டி கூட்டணியில் நேற்று மாலை வரை தொகுதி பங்கீடு முடியவில்லை. அதேபோன்று த.வெ.க., மற்றும் தேர்தலுக்காகவே துவங்கப்பட்ட புதிய கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

டோக்கன் முறை இதனால், ஒவ்வொரு தொகுதிக்குள் 10 முதல் 15 பேர் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க மனு தாக்கல் அலுவலகங்களில் 'டோக்கன்' முறையை பின்பற்ற தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us