/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
ADDED : மார் 21, 2026 10:02 PM

புதுச்சேரி: ஓட்டு எண்ணும் மையங்களை, மேலிட தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 4ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, தேர்தல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோத்திலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, தாகூர் கலைக் கல்லுாரி ஆகிய மையங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களை, மேலிட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் சுதாகர் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

