காலாப்பட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
காலாப்பட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு
ADDED : மார் 19, 2026 04:36 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு காலாப்பட்டு சோதனைச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பறக்கும்படை மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில எல்லையான காலாப்பட்டு சோதனைச் சாவடியை நேற்று முன்தினம் இரவு மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணியை ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், தொழில்நுட்ப ஆவணங்களை பார்வையிட்டு, பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தினார்.தேர்தல் பணிகளில் எவ்வித தவறும் ஏற்படாத வகையில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமெனவும், வாகனங்களை சோதனை செய்யும் போது அதனை வீடியோக்களில் கட்டாயம் பதிவிட வேண்டும் என, வலியுறுத்தினார்.
