/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
/
தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 03, 2026 04:38 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தல் தொடர்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பி., கலைவாணன், சப் கலெக்டர் இசித்தாரதி, துணை சப் கலெக்டர் குமரன், எஸ்.பிக்கள், வருவாய் துறை மற்றும் பிற தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேர்தல் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொது அமைதியைப் பேணுதல், குற்றச்செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பதட்டமான ஓட்டு சாவடியை அடையாளம் காணுதல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

