/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்; காங்கிரசில் வேகம் எடுக்கிறது தேர்தல் பணிகள்
/
'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்; காங்கிரசில் வேகம் எடுக்கிறது தேர்தல் பணிகள்
'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்; காங்கிரசில் வேகம் எடுக்கிறது தேர்தல் பணிகள்
'வார் ரூம்' தலைவராக பாலன் நியமனம்; காங்கிரசில் வேகம் எடுக்கிறது தேர்தல் பணிகள்
ADDED : நவ 02, 2025 03:49 AM
பு துச்சேரிக்கான காங்., வார் ரூம் தலைவராக முன்னாள் துணை சபாநா யகர் பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்; இதன் மூலம், தேர்தல் பணிகளை காங்., கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் இன்னும் 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. குறிப்பாக, காங்., - தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் ரகசியமாகவும், முழு வீச்சிலும் நடந்து வருகிறது.
காங்., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் தலைமையும் புதுச்சேரியில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் தொடர்பாக தனித்தனியாக ரகசிய சர்வே எடுத்துள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலுக்கான பணிகள் மு டுக்கி விட்டுள்ளன.
காங்., கட்சியை பொறுத்தவரை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் வார் ரூம் அமைத்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற முக்கிய பணிகள் இந்த 'வார் ரூமில்' தான் முடிவு செய்யப்படும்.
இந்த 'வார் ரூமில்' கட்சியின் மூத்த தலைவர்கள், தேர்தல் பணிக்குழுவினர் ஒன்று கூடி வியூகங்களை வகுப்பர். இதன்படி, புதுச்சேரியிலும் வார் ரூம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக முன்னாள் துணை சபாநாயகர் பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்., தலைமையின் ஒப்புதலுடன் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகள் வேகம் பிடித்துள்ளது.

