வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் துவக்கம்: தேர்தல் துறை அறிவிப்பு
வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் துவக்கம்: தேர்தல் துறை அறிவிப்பு
UPDATED : அக் 02, 2026 01:49 AM
ADDED : அக் 02, 2026 01:46 AM
புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரப் திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் தேர்தல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரி ரவிப்பிரகாஷ் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை உத்தரவின்படி, அக்டோபர் 1 முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து 30 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்
துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக நிறைவுசெய்யப்படும்.
புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 இல் முன்னர் கேட்கப்பட்டிருந்த கூடுதல் விவரங்களை தற்போது அளிக்க வேண்டியதில்லை. பொதுமக்கள் பழைய படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து வழங்கினாலே போதுமானது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், வார இறுதி நாட்களில் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் வாக்கள் பட்டியலில் விடுபட்ட தகுதியான நபர்கள், மாணவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு மற்றும் வாக்களர் சேர்க்கை நடக்கும். எஸ்.ஐ.ஆர்., நிறைவடைந்துள்ள நிலையில், இனி பெறப்படும் விண்ணப்பங்கள், வாக்களர் பட்டியலின் தொடர்ச்சியான புதுப்பித்தலுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் பரிசீலிக்கப்படும். தற்போது நடக்க உள்ள சிறப்பு முகாம்களில் உறுதிமொழிப்படிவம் தேவையில்லை. எஸ்.ஐ.ஆரின் போது தங்கள் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓட்டுசாவடி நிலை அலுவலர்கள் களப்பணிக்கு வரும் போது, பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தகுதியா வாக்களர்கள் தங்கள் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய எளிதான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய தேர்தல் துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
