நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் பாகூர், சேலியமேடு, குருவிநத்தம், சோரியாங்குப்பம், மணப்பட்டு, கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
போர்வெல் பாசனம் மூலமாகவே இப்பகுதியில் மகசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோரியாங்குப்பம் புறவழிச்சாலையொட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் 6 பாசன மோட்டார்களின் காப்பர் மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் குருவிநத்தம் புத்து கோவில் அருகே இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடு போன நிலையில், தற்போது சோரியாங்குப்பத்தில் விவசாய மோட்டார்களுக்கான ஒயர்கள் திருடு போன சம்பவம் விவசாயிகளையும், பொது மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.