தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : ஆக 15, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை அருகே கோவில் திருவிழாவில், டியூட் லைட் மாற்றிய எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி இறந்தார்.

மதகடிப்பட்டுபாளையம், கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் அருணாசலம் 50; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அதே பகுதியில் அய்யனார் கோவில் திருவிழாவிற்காக அலங்கார மின்விளக்குகள் மற்றும் டியூப் லைட்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

மின்கம்பத்தில் மூங்கில் ஏணியில் ஏறி டியூப் லைட் மாற்றினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டவரை, அப்பகுதி மக்கள் மீட்டு கலிதீர்த்தாள்குப்பம் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

புதுச்சேரி மின்துறை திருவண்டார்கோவில்இளநிலை பொறியாளர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில், மின் விளக்கை மாற்றியமைக்க அழைத்துச் சென்ற கோவில் பூசாரி செல்வராசு 69; மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us