ADDED : ஜூலை 13, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மின்துறை ஊழியர் கேன்சர் நோய் பாதிப்பால், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாமி, 51; மின்துறை ஊழியர். இவரது மனைவி ஜெயகுமாரி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பார்த்தசாரதி, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பார்த்தசாரதி, நேற்று காலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

