/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலைகளுக்கு புதிய தளர்வு; மின்துறை அரசாணை வெளியீடு
/
தொழிற்சாலைகளுக்கு புதிய தளர்வு; மின்துறை அரசாணை வெளியீடு
தொழிற்சாலைகளுக்கு புதிய தளர்வு; மின்துறை அரசாணை வெளியீடு
தொழிற்சாலைகளுக்கு புதிய தளர்வு; மின்துறை அரசாணை வெளியீடு
ADDED : ஜூலை 23, 2025 01:16 AM
புதுச்சேரி: தொழில் முனைவோரின் நீண்ட நாள்கோரிக்கை ஏற்று, தொழிற்சாலைகளுக்கு புதிய தளர்வுகளுக்கான அரசாணையை, மின்துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் எளிதாக வணிகம் செய்ய, தொழில் முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, புதிய தளர்வுகளுக்கான அரசாணையை மின்துறை வெளியிட்டுள்ளது. அதில், அங்கிகரிக்கப்பட்ட தொழிற்பேட்டையில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு எவ்வித உரிமமும் தேவையில்லை. குறைந்தழுத்த தொழிற்சாலைகளில் 100 கிலோ வாட்டிற்கு மேல் கூடுதல் இயந்திரங்களை அமைத்து கொள்ளலாம். மின் இணைப்பு கோரும்போது, அனைத்து இயந்திரங்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை.
புதிய மின் இணைப்புவழங்குவதற்கு நகர பகுதியில் விண்ணப்பம் பெற்றப்பட்ட 7 நாட்களுக்குள், கிராம பகுதியில் 15 நாட்களுக்குள்ளும், புதிய மின் கட்டமைப்பு அமைக்கும் பட்சத்தில், விண்ணப்பம் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 கிலோ வாட், வரையிலான மின் இணைப்பிற்கும், புதிய மின் மாற்றி அமைத்தல், மின் மாற்றியின் திறனை அதிகப்படுத்துதல் பணிகளுக்கு, மின்துறையின் செலவில் மேற்கொள்ளப்படும். அதில் மின் இணைப்பு விண்ணப்பம் பெறப்பட்ட 60 நாட்களுக்குள் வழங்கப்படும்.
பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் பெயர் மாற்றப்படும். மேலும் 10 கிலோ வாட் மேல் திறன் கொண்ட சூரிய ஒளி மின்கலன் அமைப்பதற்கு, தொழில்நுட்ப ஒப்புதல் விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் வழங்கப்படும்.
பணிகள் நிறைவுபெற்ற அறிக்கை பெறப்பட்டவுடன், 7 நாட்களுக்குள் சூரிய மின்கலன் மின் கட்டமைப்பில் இணைக்கப்படும். சூரிய ஒளி மின்கலன் இணைப்பிற்கு கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படாது.

