ADDED : மே 09, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்கவும், புதிய மின்மாற்றி அமைப்பது, தெரு விளக்குகளை பாரமரிப்பது, பழுதடைந்த புதைவட கேபிள்களை சீரமைப்பது, பட்டினத்தார் கார்டன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதிகளுக்கு புதிய புதைவட கேபிள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ,, அலுவலகத்தில் நடந்தது.
தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தலைமை தாங்கி, தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மின்துறை புதை வட கேபிள் செயற்பொறியாளர் செந்தில்குமார், பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறியாளர் ராஜஸ்ரீ, நகர மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், முத்தியால்பேட்டை மின்துறை அலுவலக இளநிலை பொறியாளர் செல்வமுத்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

