/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருவிழாவில் மின் கசிவால் பரபரப்பு
/
கோவில் திருவிழாவில் மின் கசிவால் பரபரப்பு
ADDED : மார் 16, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திப்புராயப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று மாலை மயானக்கொள்ளை நடந்தது.
அதனையொட்டி, மயானத்திற்கு சாமியை ஜோடித்து துாக்கி வரும் போது, சாமியின் மேற்பகுதி அங்கு சென்ற மின் கம்பியில் உரசியது.
இதனால் சாமி துாக்கி வந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால், சாமியை அங்கேயே இறக்கி வைத்துவிட்டு ஓடினர்.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை பலரும் மிதித்துக் கொண்டு ஓடியதால் அப்பெண் மயக்கமடைந்தார்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

