/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டத்திற்கு புறம்பான டெண்டரை ரத்து செய்ய மின் துறை போராட்ட குழு வலியுறுத்தல்
/
சட்டத்திற்கு புறம்பான டெண்டரை ரத்து செய்ய மின் துறை போராட்ட குழு வலியுறுத்தல்
சட்டத்திற்கு புறம்பான டெண்டரை ரத்து செய்ய மின் துறை போராட்ட குழு வலியுறுத்தல்
சட்டத்திற்கு புறம்பான டெண்டரை ரத்து செய்ய மின் துறை போராட்ட குழு வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2025 07:15 AM
புதுச்சேரி : புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார் மய கார்ப்பரேஷன் மய எதிர்ப்பு போராட்ட குழு பொது செயலாளர் வேல்முருகன் அறிக்கை:
கடந்த 2022ம் ஆண்டு செப்., 27ம் தேதி மின் துறை செயலர் பெயரே பதிவு பெறாத புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில், 100 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் விடப்பட்டது. அதை எதிர்த்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 25.11.2022 அன்று வரை மட்டுமே டெண்டர் பணிகளை மேற்கொள்ளவும், அந்த தேதிக்குள் பெறப்பட்ட டெண்டரை மறு உத்தரவு வரும் வரை திறக்க கூடாது என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதனை மீறி புதுச்சேரி அரசு அந்த டெண்டரை தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக கால நீட்டிப்பு செய்து வருகிறது. அதனை ரத்து செய்ய கோரி, பல முறை கடிதம் கொடுத்தும் அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டிதக்கது.
இந்நிலையில் அதானி எலெக்ட்ரிக்சிட்டி புதுச்சேரி லிட்., என்ற பெயரில் குஜராத் நிறுவனம் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டரை நீக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், தற்போது பதிவு செய்துள்ள நிறுவனத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
புதுச்சேரி மின் துறை அரசு துறையாகவே தொடர வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக விடப்பட்ட மின் துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

