தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்

மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்

மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்


ADDED : ஏப் 16, 2025 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை வரும் ஐந்தாண்டுக்கான மின் கட்டண உயர்வு உத்தேச பட்டியலை மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

புதுச்சேரி மின்துறை ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்து, மின் நுகர்வோருக்கு விநியோகம் செய்கிறது.

கொள்முதலுக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமன் செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வை மின் இணை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.

அதன்படி இந்த நிதியாண்டு முதல் வரும் 2029 - 30 நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டுக்கு உத்தேச மின் கட்டண உயர்வை மின் இணை ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மின் நுகர்வோர்களிடம் கருத்து கேட்பு நடத்தி மின் கட்டணத்தை உயர்த்த இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் 2025-26ம் ஆண்டு மின் கட்டண உயர்வு அமலாக்கப்படவில்லை.

ஐந்தாண்டு காலம் மின் கட்டணம் உயர்வு சம்பந்தமாக லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ்., கருத்தரங்க கூட்டத்தில் 29ம் தேதி கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us