ADDED : மார் 13, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் (ஐ.டி.ஐ) நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை 10:30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் (ஐ.டி.ஐ) நலச்சங்க அமைப்பு செயலாளர் ரவி, தலைவர் செல்வம் தலைமை தாங்கினர். பொதுச்செயலாளர் பிரபு, பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ெஹல்பர் ஊழியர்களுக்கு வயர்மேன் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஹெல்பர் பதவிகளை நிரப்ப வேண்டும். ஒயர்மேன் முதல் போர்மேன் வரை உள்ள பதவிகளை நிரந்தம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
