/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் துறை ஊழியருக்கு கத்திரிக்கோல் குத்து
/
மின் துறை ஊழியருக்கு கத்திரிக்கோல் குத்து
ADDED : அக் 30, 2024 04:15 AM
பாகூர்: பாகூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லிங்கேசன் மனைவி ஜீவா, 47; மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பில் கலெக்டராக பணி புரிகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாலதி 38; என்பவருக்கும் பிரச்னை உள்ளது. ஜீவாவை மாலதி தவறாக பேசி வந்தார்.
இது தொடர்பாக, ஜீவா பாகூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில், மாலதியை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
ஜீவா நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, அங்கு சென்ற மாலதி அவரை திட்டி, மிளகாய் கரைசலை முகத்தில் ஊற்றி, கத்திரிக் கோலால் குத்தி, கம்மலை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
காயம் அடைந்த ஜீவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், மாலதி மீது பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

