தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/‘காலி மனைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்’: அரியாங்குப்பம் ஆணையர் அறிவுறுத்தல்

‘காலி மனைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்’: அரியாங்குப்பம் ஆணையர் அறிவுறுத்தல்

‘காலி மனைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்’: அரியாங்குப்பம் ஆணையர் அறிவுறுத்தல்


UPDATED : நவ 28, 2026 11:22 PM

ADDED : நவ 28, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 11:22 PM ADDED : நவ 28, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலி மனைகளை சுத்தமாக வைத்து கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காலி மனைகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன.

மேலும், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாக மாறி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், சுகாதாரச் சீர்கேடு உருவாகும் நிலை உள்ளது.

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள காலி மனைகளை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

அங்குள்ள புதர் செடிகளை அகற்றி, மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வகையில் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த மனைகளின் உரிமையாளர்கள் விவரங்கள் கொம்யூன் பஞ்சாயத்தால் சேகரிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், சுற்றுப்புறத்தைத் துாய்மையாக பராமரிக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்கும் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us