UPDATED : நவ 28, 2026 11:22 PM
ADDED : நவ 28, 2026 11:22 PM

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு பள்ளியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இணைந்து காய்கறி தோட்டம் அமைத்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், காட்டேரிக்குப்பம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் புதிய தோட்டத்தை அமைத்தனர்.
அதில், பல்வேறு காய்கறி செடிகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடிகள் நடவு செய்து, புதிய தோட்டத்தை அமைத்தனர்.
இதன் மூலம் மாணவர்கள், காய்கறி சாகுபடி, மூலிகை தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் தோட்ட பராமரிப்பு குறித்த அனுபவத்தை பெற்றனர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் மற்றும் வேளாண் கல்லுாரி மாணவிகள் காவியதர்ஷினி, கீர்த்திகா, லாவண்யா, நர்மதா, நிஷா, பத்மாஷா, பார்த்திபி, பவித்ரா, பிரவீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
