/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பில் சேர தெரிவுநிலை தேர்வு
/
நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பில் சேர தெரிவுநிலை தேர்வு
நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பில் சேர தெரிவுநிலை தேர்வு
நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பில் சேர தெரிவுநிலை தேர்வு
ADDED : ஜன 17, 2025 06:00 AM
8 மையங்களில் நாளை நடக்கிறது
புதுச்சேரி: நவோதயா வித்யாலயா பள்ளியில் வரும் கல்வி ஆண்டில் 6ம் வகப்பில் சேர்வதற்கான தெரிவு நிலைத் தேர்வு நாளை புதுச்சேரியில் 8 மையங்களில் நடக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பெரியகாலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய அரசின்ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில்வரும் 2025--26ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேர்வதற்கான தெரிவு நிலைத் தேர்விற்கு 1,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு நாளை 18ம் தேதி புதுச்சேரி திரு.வி.க., அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் நடக்கிறது.
தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மற்றும் நெறிமுறைகளின் படி குறித்த நேரத்திற்கு முன்னதாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.