/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பாதை மாற்றம்
/
அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பாதை மாற்றம்
அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பாதை மாற்றம்
அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பாதை மாற்றம்
ADDED : பிப் 14, 2025 04:33 AM

புதுச்சேரி: பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் புதுச்சேரி விக்டோர் சிமோனல் வீதியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு பொது மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. 209 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், அப்பொழுதைய காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன.
இதில், செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளி இயங்கிய கட்டடம், ஆண்கள் அவசர அறுவை சிகிச்சை வார்டு, தனிமை அறை வார்டு, பிரேத பரிசோதனை கூடம், உணவு தயாரிப்பு கூடம், உணவகம் ஆகியவை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக 50 படுக்கை வசதிகளுடன், நவீன சிகிச்சை கருவிகள் கொண்ட (கிரிட்டிகல் கேர் யூனிட்) 'தீவிர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் கட்ட தேசிய சுகாதார இயக்கம் ரூ.26 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
அதை முன்னிட்டு பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி நடப்பதால் அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அலுவலகம் வாயில் வழியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.