/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து மாபியா ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
மருந்து மாபியா ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
மருந்து மாபியா ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
மருந்து மாபியா ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 06:08 AM
புதுச்சேரி: மருந்து விநியோகத்தில் நிலவும் முறைகேடுகள் களைந்திட, முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ராஜிவ்சிங் ரகுவன்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உயிரை காக்க வேண்டிய மருந்துகள், உயிரை குடிக்கும் விஷமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் 156 வகையான காக்டெயில் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.
ஆனால், ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தைக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையை அரசே ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் மருந்து மாபியா கும்பலின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. போலி மருந்துகள் உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்குகிறது.
எனவே புதுச்சேரி மாநிலத்தில் மருந்து விநியோகத்தில் நிலவும் முறைகேடுகள் களைந்திட, முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் தரப்படும் மற்றும் மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகள் தரமானவையா என ஆய்வு நடத்த வேண்டும்.