/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
/
பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் ரங்கசாமி 'அட்வைஸ்'
ADDED : அக் 27, 2025 11:41 PM
புதுச்சேரி: பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில் அதில் பணியாற்றுவோர் செயல்படவேண்டும். என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
மின்சார பஸ்கள் துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி மக்கள் பல ஆண்டுகளாக புதிய பஸ்கள் இயக்கவும், பல வழித்தடங்களில் இயக்கவும் கோரினர். சட்டசபையிலும் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி உதவி அளித்தார். இதன் மூலம் புதிதாக மாசு இல்லாத வகையில் மின்சார பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு 25 மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்னும் 75 புதிய பஸ்கள் வாங்கப்படவுள்ளது. பெண் ஓட்டுநர்களுக்கான 38 இ-ஆட்டோ ரிக்ஷா இயக்கப்படவுள்ளது.
அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தோம். பல துறைகளில் எழுத்து தேர்வு நடத்தி மதிப்பெண் மூலம் தகுதியானோருக்கு வேலை தரப்படுகிறது.
ஆயிரம் அரசு பணியிடங் களுக்கு மேல் விரைவில் நிரப்பவுள்ளோம். இளையோருக்கு வேலைவாய்ப்பு தர சேதராப்பட்டில் தொழில்பேட்டை விரைவில் அமையவுள்ளது.
துப்புறவு பணியாளர்களுக்கு தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவது ஒரு பெரிய குறை. குரூப்-டி பணியிடங்கள் எடுக்க நமக்கு அனுமதி இல்லை.
பி.ஆர்.டி.சி.,யில் நிறைய பஸ்கள் ஓடவில்லை. புதிய பஸ்கள் வாங்கி இயக்கப்பட்டால் லாபம் வரும். சம்பளம் உயர்த்தி தரப்படும்.
அரசை மட்டும் நம்பியிருந்தால் சிரமம். பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில், அதில் பணியாற்றுவோர் செயல்பட வேண்டும். விரைவில் பி.ஆர்.டி.சி., மூலமும் பஸ்கள் வாங்கவுள்ளோம். அதன்படி மொத்தம் 100 பஸ்களுக்கு மேல் வரும். அதில் லாபம் நிச்சயம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
எனது தொகுதி இளைஞர்களுக்கு
வேலை கிடைக்கவில்லை
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், எனது தொகுதியில் உள்ளோருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற குறை உண்டு. குரூப் டி அவுட்சோர்சிங் முறையில் எடுப்பது குறைதான். இந்த குறை எல்லா எம்.எல்.ஏ.,க்களுக்கும் உண்டு. சில சங்கடங்கள் நமக்கும் உள்ளது.

