தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ச ாரதா கங்காதரன் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

ச ாரதா கங்காதரன் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

ச ாரதா கங்காதரன் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : பிப் 18, 2025 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியில் அனைத்து ரோட்டரி கிளப் மற்றும் ஈக்விட்டாஸ் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு, கல்லுாரியின் துணைத் தலைவர் பழனி ராஜா முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு முகாமில் ஜென் கார்ப் டெக்னோ சொல்யூஷன்ஸ், ஸ்ரீ சக்ரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ராட்னஸ் கம்யூனிகேஷன்ஸ் உட்பட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முகாமிற்கு, ரோட்டரி கிளப் புதுச்சேரி மாவட்ட தலைவர் செந்தில் வரவேற்றார். மாவட்ட கவர்னர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் சண்முகானந்தம் , கல்லுாரியின் முதல்வர் பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.1200 பேர் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாமில்,735 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், 315 பேருக்கு, உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சாரதா கங்காதரன் கல்லுாரியின் ஒருங்கிணைப்பாளர் சீனு தண்டபாணி செய்திருந்தார்.

துணைத் தலைவர் ஜோஷிக் சங்கர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us