தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளர் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்: 2,145 பேர் பங்கேற்பு

தொழிலாளர் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்: 2,145 பேர் பங்கேற்பு

தொழிலாளர் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்: 2,145 பேர் பங்கேற்பு


ADDED : பிப் 19, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் நடந்த மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 2145 பேரில், 923 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் மூலம் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், மெகா வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

முகாமில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 42 கம்பெனிகள் கலந்து கொண்டன. காலியாக உள்ள 10,288 இடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை நடந்த முகாமில்,10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட பல பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 2145 பேர் முகாமில் பங்கேற்றனர்.

இதில், 923 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த கம்பெனிகளின் சார்பில் அடுத்தகட்ட தேர்வு நடத்தி பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் தொழிலாளர் துறை ஆணையர் முத்தம்மா, செயலர் மாணிக்தீபன் மற்றும் வேலை வாய்ப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மொபைல் போனில் மூழ்கிய போலீசார்: வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலை வாங்க வேண்டும் என்ற கனவுடன் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று முகாமில் குவிந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து இரு பெண் காவலர்கள், தனக்கு கிடைத்த போலீஸ் பணியின் மதிப்பை உணராமல், நாற்காலியில் அமர்ந்து மொபைல் போனில் மூழ்கி சிறப்பாக பணி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us