ADDED : ஏப் 28, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூரில் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுப்பணித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை பாகூர் நீர்பாசன கோட்ட இளநிலை பொறியாளர் நடராஜன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது; பாகூர் ஏரியின் சேரி மதகு வாய்க்கால் வழியாக, காட்டுக்குப்பம் ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வாய்க்காலில் கரையில், புதிய புறவழிச்சாலைக்கு சந்திப்பு அருகே, சட்ட விரோதமாக கொட்டகை அமைக்கப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
அதனை தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

