/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தெப்பகுளம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் வேதனை
/
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தெப்பகுளம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் வேதனை
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தெப்பகுளம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் வேதனை
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தெப்பகுளம் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் வேதனை
ADDED : ஏப் 20, 2025 11:09 AM

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் உடனுரை மன்னாதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் குல தெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு, ஆண்டு தோறும் தீ மிதி திருவிழாவும், அதனை தொடர்ந்து தெப்பல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதற்காக, கோவிலின் மேற்கு பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தெப்ப குளக்கரையில் இருந்து சக்தி கரகம், பூ கரகம் அலங்கரித்து கொண்டு சென்று திருவிழா விமர்சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், தெப்ப குளத்தின் கரை ஆக்கிமிப்புக்குள்ளாகி, கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால், தெப்ப உற்சவம் நடைபெறுவது தடைபட்டு பல ஆண்டுகளாக அப்படியே இருந்து வந்தது. இதனிடையே, கரை பகுதி ஓரளவு சீரமைக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளாக மீண்டும் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, தெப்ப குளத்தை மீட்டெடுத்து பராமறிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தற்போது கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் துணையுடன், தெப்பகுளத்தின் கிழக்கு கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைத்து வருகின்றனர். இருப்பினும், சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கழிவு நீரை நேரடியாக தெப்பக்குளத்தில் விட்டு வருகின்றனர்.
இதனால், தெப்பக்குளத்தின் புனிதம் கெட்டு வருகிறது.
ஆக்கிரமிப்புக்குள்ளான தெப்பக்குளத்தை மீட்டெடுத்து, கரையை சுற்றி மின் விளக்கு வசதியுடன் நடைபாதை அமைத்திடவும், இக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை, சர்வே செய்து அவற்றை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

