/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு: வீடுகள் அதிரடியாக அகற்றம்
/
வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு: வீடுகள் அதிரடியாக அகற்றம்
வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு: வீடுகள் அதிரடியாக அகற்றம்
வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு: வீடுகள் அதிரடியாக அகற்றம்
ADDED : ஏப் 24, 2025 05:22 AM

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அரியாங்குப்பம், வீராம்பட்டினம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், அரசியில் கட்சியினர், பல்வேறு அமைப்பினர்இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி பொதுப்பணித்துறை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் வரை, 60 அடி அகலத்தில், சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.
வீராம்பட்டினம் சாலை செட்டிக்குளம் வளைவு பகுதியில் குறுகியதாக இருந்ததால், அந்த பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஆகற்ற முதலில் முடிவு செய்தனர். அந்த பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து 18 வீடுகளை கட்டியுள்ளனர்.
அவர்களுக்கு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பினர். குடியிருப்பவர்கள் இடத்தை காலி செய்ய மாட்டோம்; அருகிலேயே மாற்று இடம் வேண்டும் என கேட்டு அடம்பிடித்தனர். வீடுகளை காலி செய்யாமல் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், அங்கு குடியிருக்கும் 18 குடும்பத்தினரை அழைத்து, கலெக்டர் குலோத்துங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். குடியிருப்பவர்கள் அருகிலேயே, பட்டாவுடன்,மாற்று இடம் தருகிறோம். வீடு கட்டுவதற்கு கடன் உதவி வழங்குகிறோம் என, தெரிவித்தார்.
அதற்கு 10 குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், மற்ற 8 குடும்பத்தினர் மறுத்தனர்.
அதையடுத்து, அவர்களுக்கு இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
பின், கடந்த 16ம் தேதி 8 குடும்பத்தினரையும் அழைத்து,சப் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்கு உடன்படாததால், 19ம் தேதி அதிகாரிகள் 18 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டினர்.
இந்நிலையில், தாசில்தார் பிரிதீவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், எஸ்.பி., பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் நேற்று காலை, 10:00 மணியவில், ஆக்கிரமிப்பு செய்துள்ள 18 வீடுகளை ஜே.சி.பி., மூலம்அப்புறப்படுத்தினர்.
ஆத்திரமடைந்த ஒரு குடும்பத்தினர் வீட்டில் உள்ளே கதவை பூட்டி கொண்டு வெளியில் வராமல் இருந்ததால், அவர்களை அகற்ற சென்ற போலீசாரை கற்களால், தாக்கினர். வீடுகளை இடித்த போது தடுத்த 7 பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர் நடவடிக்கை
கடந்த 15 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு இடங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து, வீராம்பட்டினம் சாலையில் இருக்கும் மற்ற ஆக்கிரமிப்பு இடங்களை பொதுப்பணித்துறை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

