புதுச்சேரியில் 6வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரியில் 6வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூன் 08, 2026 04:15 AM
புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து இன்று6வது நாளாக அகற்றப்படுகிறது.
கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்படி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்துசாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், 6வது நாளான இன்று (8ம் தேதி) ஆம்பூர் சாலையில், பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்கிறது.
தொடர்ந்து, இ.சி.ஆரில் மடுவுபேட் சந்திப்பு முதல் சிவாஜி சதுக்கம் வரையிலும், உழவர்கரை நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.
