/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்
/
புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்
புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்
புதுச்சேரி சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்
ADDED : ஏப் 06, 2025 02:05 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் மோசடி சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரால் சீல் வைக்கப்பட்ட, 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தில் நேற்று அமலாக்க துறையினர் சோதனை நடத்தி, நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்த பல கோடி ரூபாயை முடக்கினர்.
புதுச்சேரி, சாரம், காமராஜர் சாலையில் இயங்கி வரும் 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம், பொதுமக்களை சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்தன.
சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவில், போலீசார் கடந்த 3ம் தேதி இரவு தாசில்தார் பிரித்திவி முன்னிலையில் நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம், 2.45 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். சில ஆவணங்களை பறிமுதல் செய்து, நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
தொடர் விசாரணையில், 2018 முதல் பெங்களூருவில் இயங்கி வருவதும், இந்நிறுவனம் புதுச்சேரி உட்பட நாடு முழுதும் பல்வேறு நகரங்களில், பல்வேறு பெயர்களில் நடத்தி வருவதும், புதுச்சேரியில் தனி நபர், 4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 52,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
பின்னர், 9 மாதங்கள் கழித்து, கட்டிய 4.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொள்ளலாம் எனக்கூறி, 1,000க்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாக சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் செயல்படுவதற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால், பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை அமலாக்க துறைக்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து, சென்னை அமலாக்க துறை துணை இயக்குநர் நளினி ரவிக்கிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேர் குழுவினர் நேற்று, இந்நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், அந்நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை இருப்பதை அறிந்து, அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கினர்.
மேலும், நிறுவனத்தில் பறிமுதல் செய்த, 2.45 கோடி ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்ய அனுப்பினர். இந்நிறுவனத்திடம் ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சைபர் கிரைமில் முறையிட்டால், டிபாசிட் பணத்தில் இருந்து, திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

