/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழந்த இன்ஜினியர்
/
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழந்த இன்ஜினியர்
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழந்த இன்ஜினியர்
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழந்த இன்ஜினியர்
ADDED : நவ 03, 2024 05:40 AM
புதுச்சேரி: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக வாட்ஸ் அப் குரூப் இணைந்து ரூ. 35 லட்சத்தை சாப்ட்வேர் இன்ஜினியர் நேற்று மோசடி கும்பலிடம் இழந்தார்.
புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் சாப்ட்வேர் கம்பெனி ஊழியர். இவர், தன்னிடம் உள்ள பணத்தை முதலீடு செய்வதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான வாட்ஸ் அப் குரூப் ஒன்றில், அவரை இணைத்தார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய சாப்ட்வேர் கம்பெனி ஊழியர், தன்னிடம் இருந்த 34 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை நேற்று ஒரே நாளில் பல தவணைகளாக வாட்ஸ் ஆப் குரூப்பில் தெரிவித்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தினார்.
அவர் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் தொகையாக ரூ. 1 கோடி வரை கிடைத்துள்ளதாக, வாட்ஸ் ஆப் குரூப்பில் காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே தான், ஏமாந்தது தெரியவந்தது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.