ADDED : செப் 17, 2026 08:01 PM
புதுச்சேரி: மதகடிபட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பொறியாளர் தினம், இன்னவேட்டர்ஸ் தினமாக கொண்டாடப்பட்டது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரியின் டீன் அன்புமலர் வரவேற்றார். மணக்குள விநாயகர் அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, தேசிய அளவில் நடந்த செயல்திட்ட போட்டியில், புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 40 பொறியியல் கல்லுாரி மற்றும் பல்கலை கழகத்தில் இருந்தும், 20 பள்ளிகளில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், 750க்கும் மேற்பட்ட குழு மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவுகளில் செயல் திட்டங்களை (பிராஜெக்ட்) சமர்ப்பித்தனர்.
சிறந்த திட்டங்களை சமர்ப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 1,00,000 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பகிர்ந்து அளிக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை டீன் கைலாசம் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன் நன்றி கூறினார்.
