ADDED : செப் 17, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து, அவ்வழியாக செல்பவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், கண்டாக்டர் தோட்டம், பிரிதர்ஷனி நகரை சேர்ந்த சாரதி,19; என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
