ADDED : செப் 07, 2025 02:37 AM

புதுச்சேரி : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் மேலாண்மை துறை மற்றும் தொழில் முனை வோருக்கான பிரிவு சார்பில், 'பவுண்டர்ஸ் பிளேம்' என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில், மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி முதல்வர் வெங்கடாஜலபதி, மேலாண்மை துறை தலைவர் கைலாசம், முதுநிலை கணினி பயன்பாட்டு துறை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலாண்மை துறை பேராசிரியர் கவிதா வரவேற்றார்.
ஸ்டெப் ஈஸ் புட்கேர் நிறுவனர் அருணாச்சலம் முத்துகருப்பன் பங்கேற்று, மாணவர்களுக்கு தொழில் முனைவோர்க்கான நடைமுறைகள், தொழில் துவங்குவதற்கான சவால்கள், புதுமை மற்றும் படைப்பாற்றலின் அவசியம், வணிகத் திட்டமிடல், நெட்வொர்க் அமைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் வணிகத்தை விரிவாக்குதல் குறித்து பேசினார். பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.