/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் சுற்றுசூழல் தின விழா
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் சுற்றுசூழல் தின விழா
ADDED : ஆக 01, 2025 02:28 AM

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரியில் (எம்.ஐ.டி) இயந்திரவியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட்ஆப் என்ஜினியர்ஸ் மெக்கானிக்கல் மாணவர் பிரிவு சார்பில், உலக சுற்றுசூழல் தினம்- 2025 மாசுபாட்டை ஒழிப்போம் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
மணக்குள விநாயகர் தொழில்நுட்பகல்லுாரி, தேர்வுகட்டுப்பாட்டாளர் ராஜாராம் வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் போட்டியை துவக்கி வைத்து மாணவர்களிடையே போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
புதுச்சேரி மற்றும் கடலுார் பகுதிகளிலிருந்து சுமார் 40 பள்ளிகளிருந்து 150 மாணவர்கள் ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு 6, 7,8ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும், 9, 10ம் வகுப்பு பிரிவிலும் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.