ADDED : ஜூன் 09, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய பொறியாளர்கள் நிறுவனம், பொதுப்பணித்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூடத்தில் நடந்தது.
புதுச்சேரி மாநில நடுவத் தின் செயலர் சவுந்திரராஜன் வரவேற்றார். தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி விழாவினை துவக்கி வைத்தார். நண்பர்கள் அமைப்பின் அமைப்பாளர் சீனுதமிழ்மணி பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பொறியாளர் ராமு பிளாஸ்டிக்கை முறியடிப்போம் என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இளநிலை பொறியாளர் சிவஞானம் நன்றி கூறினார்.