ADDED : செப் 24, 2025 06:09 AM

புதுச்சேரி : தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தென்னிந்தியா எதிர் நோக்கி உள்ள சுற்றுச்சூழல் சவால்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
கருத்தரங்கில், தென் மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தலைவர், உறுப்பினர் செயலர்கள் கலந்து கொண்டு, தென்னிந்தியா எதிர் கொண்டு உள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்தனர்.
இதில், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று, தமிழக பகுதியில் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளால், புதுச்சேரியில் நிலத்தடி நீர் குறைவது, பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறைகளில் இருந்து பாலாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் காரைக்கால் அரசாலாறில் ஏற்படும் மாசுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும்' பேசினார்.