/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜென்மராக்கினி மாதா கோவிலில் சமத்துவ பொங்கல்
/
ஜென்மராக்கினி மாதா கோவிலில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 15, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா கோவிலில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். ஆலயப் பங்கு தந்தை ரொசாரியோ முன்னிலை வகித்தார்.
விழாவில், ஆலய துணை பங்குத்தந்தை ஆரோன், மறை மாவட்ட பொருளாளர் பிலோமினா தாஸ், பெத்தி செமினார் பள்ளியின் துணை முதல்வர் சின்னப்பன், மகளிர் குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து பெண்களுக்கு கோலம், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

