/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்
/
போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 14, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கலை முன்னிட்டு, உறியடி போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் தை பொங்கலான நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.
விழாவில், ஸ்டேஷனில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் பாரம்பரிய வேட்டி, சேலை உடை அணிந்து பங்கேற்று புதுபானையில் பொங்கலிட்டு, வழிபட்டனர்.
தொடர்ந்து, போலீசாருக்கு இடையே உறியடி போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.