sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் ஐக்கியம்

/

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் ஐக்கியம்

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் ஐக்கியம்

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் ஐக்கியம்


ADDED : பிப் 19, 2024 05:04 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்., கட்சி தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி முத்தியால்பேட்டை ஈரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் இருந்து நிறுவனர் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பைக்கில் ஊர்வலமாக புறப்பட்டு , முக்கிய வீதிகள் வழியாக காங்., தலைமை அலுவலகத்தை வந்தடைந்தார்.

காங்., கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னிலையில் ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் இணைந்தார்.

விழாவில் காங்.,மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பேசும்போது, ராகுல் மக்களின் துயரம், வேதனையை பார்த்து இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவருடைய எண்ணமெல்லாம் மக்களுக்கு துன்பம் இருக்கக்கூடாது, நன்மை மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் மோடி அவற்றையெல்லாம் மறந்து மனதில் ஈரமின்றி கொடுமையான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றார் எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.,அனந்தராமன், இளைஞர் அணி தலைவர் ஆனந்தபாபு நடராஜன், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் மருது பாண்டியன்,இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜகுமார், பொதுச்செயலாளர்கள் திருமுருகன், மணவாளன், சந்திரிகா,மோகந்தாஸ், சிறப்பு அழைப்பாளர்கள் தியாகராஜன், லுத்தி ஜேம்ஸ், சரவணன், வட்டாரத் தலைவர்கள் ஆறுமுகம், ஆனந்த் பாபு, கிருஷ்ணராஜ், கோபு, விநாயகம், சுந்தரம், குமரன், இலக்கிய பிரிவு தலைவர் கோவிந்தராஜ், சிறப்பு அழைப்பாளர் சார்லஸ், மாநில செயலாளர் முத்துகுமரசாமி , என்.ஆர்.ஐ., பிரிவு தலைவர் பரந்தாமன், ஊசுடு செழியன், மகிலா காங்.,நிர்வாகிகள் பஞ்ச காந்தி, ஜெயலட்சுமி, அம்சா உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us