sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இ.எஸ்.ஐ.சி., காப்பீடு: தன்னார்வ பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு

/

 இ.எஸ்.ஐ.சி., காப்பீடு: தன்னார்வ பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு

 இ.எஸ்.ஐ.சி., காப்பீடு: தன்னார்வ பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு

 இ.எஸ்.ஐ.சி., காப்பீடு: தன்னார்வ பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு


ADDED : ஜன 20, 2026 03:37 AM

Google News

ADDED : ஜன 20, 2026 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இ.எஸ்.ஐ.சி., தன்னார்வப் பதிவுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட் டுள்ளது.

தெழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிறுப்பதாவது:

இ.எஸ்.ஐ.சி காப்பீட்டுக் கழகத்தின் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருந்தது. தற்போது, மேற் கூறிய திட்டம் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்த னைகளுடன் வரும் 31ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ் .ஐ., சட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பதிவு செய்ய ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முந்தைய காலத்திற்கான பங்களிப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை. கடந்த காலங்களில் பதிவு செய்யாததற்காக விதிக்கப்படும் அபராதம், வட்டி மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தாமாக முன்வந்து பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு முந்தைய காலங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படமாட்டாது. பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

ஆகையால், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த சிறப்பு வாய்ப்புக் காலத்தில் பதிவு செய்யத் தவறும் தகுதியுள்ள நிறுவனங்கள் எதிர்காலத்தில் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

திட்டத்தில் பங்கேற்பதை எளிதாக்கும் வகையில் மண்டல அலுவலகம் மற்றும் அனைத்து கிளை அலுவலகங்களிலும் தனிப்பட்ட பதிவு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்கப்படும்.

வாய்ப்பினை பயனப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டலஇயக்குநர் தெரிவித்ததுள்ளார்.






      Dinamalar
      Follow us